Jailer Review : டைகர் முத்துவேல் பாண்டியன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாரா.? இல்லையா.? முழு விமர்சனம் இதோ

Jailer Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படத்தின் கதை :  ரஜினி தனது மகன், பேரன் என குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மகன் ஒரு போலீஸ் (வசந்த் ரவி) சிலை கடத்தல் பிரிவில் ஒரு கேங்ஸ்டர் பிடித்து அடித்து விடுகிறார் இதை தெரிந்து கொண்ட கேங்ஸ்டர் தலைவன். வசந்த் ரவியை கொன்று விட்டதாக ஒரு காட்சிப்படுத்தப்படுகிறது.

இதை பார்த்த ரஜினி நொந்து போகிறார் பிறகு கேங்ஸ்டர் தலையை வெட்ட ரஜினி செல்கிறார் அந்த நேரத்தில் உனது மகன் உயிருடன் தான் இருக்கிறான் அவனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றால் நமக்குள் ஒரு டீல் போட வேண்டும் என சொல்லுகிறார் அதனை செய்து முடித்து களத்தில் இறங்குகிறார் ரஜினி அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை..

படத்தில் ரஜினி – யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் நம்மை சிரிக்க வைக்கும்  ரஜினி குடும்பத்தில் வரும் காட்சிகள் கூட நன்றாக இருக்கும் ஆனால் சுனில் தமன்னா வரும் காட்சி சற்று இழுப்பது போல நமக்கு தோன்றும் ஆனால் அதுவும் முக்கியமானதாக இருக்கும்..

வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் சூப்பராக நடித்து அசத்தினார் கெஸ்ட் ரோலில் மோகன்லால், சிவராஜ்குமார் வரும் காட்சியும் படுமாஸாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது படத்தில் பல மாஸ் காட்சிகள் உள்ளது குறிப்பு ரஜினிக்கு பிரேம் பை பிரேம்  செம்ம மாஸாக இருக்கும் ரசிகர்கள்.

இதனை கொண்டாடி தீர்ப்பார்கள் படத்தில் மிகப்பெரிய பிளஸ் அனிருத் இசை  நாம் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு சீனுக்கும் தரமான இசையை போட்டு அசத்தியுள்ளார் மொத்தத்தில் ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் , நெல்சனுக்கு மிகப்பெரிய come back கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment