ஜெயிலர் பார்த்து பிரமித்து போய் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.! என்ன சொன்னார் தெரியுமா.? அட இதுக்கு பேரு தாங்க பெரிய மனசு.

Jailer : நெல்சன் திலிப் குமார் இதற்கு முன்பு தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை அதனால் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் நேற்று கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் ஜெயிலர் திரைப்படம் பக்காவாக தலைவர் திரைப்படமாக உருவாக்கியுள்ளது என பல ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள் உலக அளவில் வசூலையும் வாரி குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் நாயகனாக ரஜினி நடித்துள்ளார் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிருனால், மோகன்லால், தமன்னா, சிவராஜ் குமார், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இதனால் விஜய் நெல்சனுக்கு போன் செய்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார் இதற்கு முன்பு நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட்  திரைப்படத்தை இயக்கியினார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை ஆனாலும் நெல்சன் மீது இருக்கும் நட்பின் காரணமாக அவருக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தளபதியின் இந்த செயல் பெரும் பாராட்டுக்குரியது என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா திரைப்படம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததற்கு காரணமே தளபதி விஜய் தான் ஏனென்றால் பீஸ்ட் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்குவித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் முதல் நாள் சூட்டிங் நடப்பதற்கு முன்பே நெல்சன் அவர்களுக்கு ஃபோன் போட்டு எழுப்பி விட்டது தளபதி விஜய் தான் என பேட்டியில் நெல்சன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இப்படி நெல்சன் மீது அதீத அன்பு வைத்துள்ளார் விஜய் அவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தளபதி விஜய். தளபதி விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு தற்பொழுது ஓய்வில் இருக்கிறார் லியோதிரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார் .

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது அதனால் லியோ திரைப்படம் மரண ஹிட் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment