ஆக்ஷனில் கே ஜி எஃப் – யை தூக்கி சாப்பிடும் ஜெயிலர் ஸ்டண்ட் காட்சிகள்.. லீக்கான புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது. இதனை அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என ரஜினி பல இயக்குனர்களிடம் கதை கேட்டார்.

ஒரு வழியாக  இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கதை ரொம்ப பிடித்து போகவே அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி கைகோர்த்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த திரைப்படத்தில்  ஆக்சன்  அதிகமாக இருக்கும் என சொல்லப்பட்டது. இதில் நடிகர்  ரஜினி சிறைச்சாலை உயர் அதிகாரியாக நடித்து வருகிறார் அவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்போ ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருந்தாலும் அவ்வபொழுது படப்பிடிப்பு தளத்திலிருந்து  புகைப்படங்கள் லீக்காகி கொண்டு தான் இருக்கிறது அப்படி அண்மையில் ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் கசிந்திருக்கின்றன.

இதை பார்த்த ரசிகர்கள் ஸ்டண்ட் காட்சிகள் கே ஜி எஃப் 2 படத்தில் எப்படி அதிக ஆக்சன் காட்சிகள் இருந்ததோ.. அதே போல ஜெயிலர் படத்தில் இருக்கும் என கூறி கமெண்டடித்தும் லைக்குகளை அள்ளி வருகின்றனர் இதோ ஜெயிலர் படத்திலிருந்து வெளிவந்த அந்த ஸ்டண்ட் புகைப்படம்..

jailer
jailer

Leave a Comment

Exit mobile version