இயக்குனர் நெல்சனுக்கு “மிகப்பெரிய பரிசு” கொடுத்த ஜெயிலர் பட நடிகர்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் கடைசியாக விஜய் வைத்து “பீஸ்ட்” என்னும் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி என அனைத்தும்..

கலந்த  படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் ரஜினி உடன் இணைந்து ஜாக்கி ஷரீஃப், சிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறதாம். படத்தின் காட்சிகளை அவ்வப்போது ரஜினி கவனித்து வருகிறாராம்.

இதுவரை எடுத்த அனைத்து காட்சிகளும் பிரமாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது இதனால் ஜெயிலர் படம் வெற்றி பெறுவதில் யாராலும் தடுக்க முடியாது என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்தில் இயக்குனர்நெல்சனின் திறமையை பார்த்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

jackie shroff

அது வேறு ஒன்றும் அல்ல.. விலை உயர்ந்த “ஒரு ஸ்கூட்டியை” தான் நெல்சனுக்கு வாங்கி தந்துள்ளார் அந்த ஸ்கூட்டி உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெல்சன் ஒரு பதிவை ஒன்றையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது தேங்க்யூ சோ மச் ஃபார் திஸ் கியூட் சர்ப்ரைஸ் அண்ட் ஆல் தி லவ் சார் எனக்கூறிய கமெண்ட் அடித்துள்ளார். இதோ நெல்சன் அந்த அந்த ஸ்கூட்டி உடன் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nelson

Leave a Comment

Exit mobile version