பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையாடும் “ஜெயிலர்” – 2 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ரஜினி… கடைசியாக நடித்த சில படங்கள் சுமாரான ஓடியதால்  தனது 169 திரைப்படம் மிக பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் சொன்ன “ஜெயிலர் கதை” ரொம்ப பிடித்து போகவே உடனடியாக படமாக உருவாகியது.

படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் பல பட்டாளங்கள் நடித்திருந்தனர் 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது தொடர்ந்து இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து.

வருவதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஜெயிலர் படத்தை பார்த்து வருகின்றனர் இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் குறித்து வெளியாகி உள்ளது முதல் நாளில் உலகம் முழுவதும்  கிட்டத்தட்ட  99 கோடி வசூல் செய்து தமிழகத்தில் மட்டும் 25 கோடி வசூல் செய்தது.

2 நாட்கள் முடிவில் மொத்தமாக சேர்த்து தமிழகத்தில் மட்டும் சுமார் 40 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம். வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவும் சரி, ரஜினியும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment