வசூலில் சரிவை கண்ட “ஜெயிலர்”.. 14 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ரஜினி இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.

ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, யோகி பாபு, மிர்னா மேனன், ரெடின் கிங்ஸ்லி, சுனில், மாரிமுத்து என பலர் நடித்திருந்தனர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 4000 திறக்கும் மேற்பட்ட திரைஅரங்குகளில் வெளியானது.

ஜெயிலர் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி எமோஷனல் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால்  ரசிகர்களையும் தாண்டி  குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஜெயிலர் படம் உலகம் எங்கும்  வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி இத்துடன் 14 நாட்களாகிய நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி உலகம் முழுவதும் சுமார் 550 கோடி வசூல் செய்து இருக்கிறதாம். முதல் வாரத்தில் மட்டும் சுமார் 375 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் வசூல் கம்மியாகி உள்ளது.

ஒட்டுமொத்தமாகவே சுமார் 175 கோடி வசூல் செய்துள்ளது. நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க ஜெயிலர் படத்தின் வசூல் கம்மியாகுவது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஜெயிலர் திரைப்படம்  600 லிருந்து 700 கோடி வரை வசூலிப்பது உறுதி என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment