ஜவான் கொண்டாட்டத்திற்கு நடுவே காவலா வீடியோ பாடலை வெளியிட்டு அதகளம் பண்ணும் ஜெய்லர்.! தமன்னாவுக்கு ஈடு கொடுக்க முடியுமா.?

JAILER - Kaavaalaa Video Song
JAILER - Kaavaalaa Video Song

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா,யோகி பாபு, மோகன் லால், சிவராஜ்குமார், விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டுமல்லாமல் வசூலில் 600 கோடிக்கு மேல் வாசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ஜெயிலர் வசூலை பார்த்து பிரமித்து போன சன் பிக்சர் நிறுவனம் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு செக்கை பரிசாக கொடுத்த பின்பு bmw காரையும் பரிசாக கொடுத்தார்கள் அப்படி இருக்க படத்தை இயக்கிய நெல்சனுக்கு எதுவுமே கிடையாதா என ரசிகர்கள் கேட்பதற்கு முன்பே நெல்சனுக்கும் செக் மற்றும் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்தார் படத்தை தயாரித்த கலாநிதி மாறன்.

அடுத்து ரசிகர்கள் அனிருத்துக்கு ஒன்னும் இல்லையா என கேட்பார்கள் என தெரிந்து கலாநிதி மாறன் அனிருத் அவர்களுக்கும் செக் மற்றும் காரை பரிசாக கொடுத்துள்ளார். அனிருத் மியூசிக் இந்த படத்தில் அல்டிமேட் ஆக இருந்தது அது மட்டும் இல்லாமல் காவலா பாடல் இன்னும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது பல நடிகர் மற்றும் நடிகைகள் இணையதள வாசிகள் என அனைவரும் காவலா பாடலுக்கு ரீல் செய்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காவலா வீடியோ பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்படி இருக்கும் வகையில் சன் பிக்சர் நிறுவனம் காவலா வீடியோ பாடலை தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த வீடியோ பாடல் வெளியாகி இதுவரை 35 லட்சம் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஜவான் படம் இன்று திரையரங்கில் வெளியாகிறது அதற்கு போட்டியாக காவலா சாதனை படைத்து வருகிறது.