இதெல்லாம் ஒரு கதை.. இதுல வேற என்ன நடிக்க சொல்றியா.? ஜெயிலர் படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்.? அதன் பிறகு தான் ரஜினியா.?

Jailer first actor choice : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது சமீபத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் நெல்சன் ரஜினியிடம் கூறுவதற்கு முன்பே முன்னணி நடிகர் ஒருவரிடம் கூறியுள்ளார். அது வேறு யாரும் கிடையாது மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் பாட்டும் கிடையாது ரொமான்ஸ் கிடையாது என படத்தை ரிஜெக்ட் செய்துள்ளார் சிரஞ்சீவி இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் நெல்சன் இந்த கதையை கூறியுள்ளார், ஜெயிலர் கதையை கேட்ட ரஜினி வயதுக்கேற்ற கதை என்பதால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் தமன்னா ரம்யா கிருஷ்ணன் சிவராஜ் குமார் மோகன்லால் விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

ஜெயிலர் திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தால் மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் தன்னுடைய எண்ணத்தை சிரஞ்சீவி மாற்றிக் கொண்டாராம் அதாவது இனிமேல் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் பாடல் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.