“ஜெயிலர் படம்” இப்படிதான் இருக்கும்.. முன்கூட்டியே சொன்ன யோகி பாபு.! குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

Jailer Movie : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து “ஜெயிலர்” படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரஜினியுடன் கைகோர்த்து சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்..

மோகன்லால், ரித்து ராக்ஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளிவர இன்னும் சில நாட்களில் இருப்பதால் அனைத்து இடங்களிலும் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது பலரும் போட்டி போட்டு கொண்டு படத்தை புக் பண்ணி வருகின்றனர்.

இதன் மூலம் மட்டுமே ஜெயிலர் திரைப்படம் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படம் முதல் நாளே பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஜெயிலர் படம் படம் குறித்து பேசி உள்ளார்.

அவர் சொன்னது நான் யோகி பாபு விடும் பேசும்பொழுது ஜெயிலர் படம் குறித்த பல தகவல்களை கொடுத்தார். அண்ணா இவரா சூப்பர் ஸ்டார் இப்படியா என நினைப்பீங்க.. படம் முழுக்க நானும் ரஜினி சாரும் சிரிக்க வைத்திருக்கும்..

குறிப்பா ரஜினி சார் வாயை திறந்தாலே ரசிகர்கள் சிரிப்பாங்க அந்த அளவுக்கு ஜெயிலர் படம் ஒரு சூப்பர் படம் யோகி பாபு சொன்னாராம்.. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி சாரின் நடிப்பை பார்த்து யோகி பாபு ஷாக்காகி அப்படியே நின்னு விட்டாராம் அந்த அளவிற்கு படத்தில் பல டார்க் காமெடிகள் இருக்கிறது எனக்கூறி உள்ளார்.

Leave a Comment