ஜெயிலர் வசூலை லியோ முறியடுச்சா.. மீசையை சரிச்சிக்கிறேன் சவால் விடும் பிரபல நடிகர்

Jailer : 40 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டு இருக்கும் இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் நல்ல வசூலை அள்ளினாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதனால் ரஜினியின் மார்க்கெட்டு விழுந்தது என பலரும் விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்க இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் கோலாகலமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது.

இதனால் படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயிலர் படம் வெளியாகி இத்துடன் 25 நாட்களான நிலையில் உலகம் முழுவதும் சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறைய போவதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும் அரசியல் அரசியல்வாதியமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஜெயிலர் படத்தின் வசூலை அடுத்ததாக வெளியாகப் போகும் விஜயின் லியோ பீட் செய்ய முடியாது  அடித்துக் கூறி உள்ளார் அவர் சொன்னது..

லியோ வசூலும் ஜெயிலர் படத்தை போன்று வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது என தொகுப்பாளர் கூற ஆதங்கத்தில் மீசை ராஜேந்திரன் அப்படியெல்லாம் இல்லை சார் ஜெயிலர் படத்தை நெருங்க கூட முடியாது. லியோ அப்படி நடந்துவிட்டால் நான் என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என சவால் விட்டார் இந்த வீடியோ  தற்பொழுது ரஜினி, விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.