கர்நாடகாவில் மாஸ் காட்டிய ஜெயிலர் இத்தனை கோடி வசூலா? எல்லா ஏரியாவுலையும் தலைவர் தான்

Jailer movie : தமிழ் சினிமாவில் இன்று  உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார் இந்த படத்தில் நடிக்கும் போதே ரஜினிக்கு தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று அதை உறுதிப்படுத்தும்..

வகையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஓடி வந்து நெல்சனை இறுக்கி கட்டி இப்படி தவறாம் அப்பொழுதே நெல்சனும் அதை உணர்ந்துவிட்டதாம். மேலும் ஜெயிலர் ஹிட் என்ற காரணத்தால் ரஜினி ரிலீஸ்க்கு  முன்பே இமயமலைக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.

படத்தில்  ரஜினி உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி, தமன்னா, சுனில், மறைந்த நடிகர் மாரிமுத்து என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்தது படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் ஆரம்பத்திலேயே தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் அதன் காரணமாக படத்தின் வசூலும் அதிகரித்தது.

200 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் திரைப்படம் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த நிலையில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இபோ OTT தளத்திலும் செம மாஸ் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழ்நாட்டையும் தாண்டி பல்வேறு இடங்களில் ஜெயில்ர் வசூல் செய்து வருகிறது.

அதுபோல கர்நாடகாவில் ஜெயிலர் படம் வெளியாகி அங்கு இதுவரை 71 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் தலைவருக்கு மார்க்கெட் குறையல இப்பதான் ஏறி இருக்கு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ரஜினி அடுத்து 170 171 ஆகிய படங்களில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.