“ஜெயிலர்” படத்தில் சொதப்பிய கதாபாத்திரங்கள்.? திருந்தாத நெல்சன்

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால் 169 வது திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார் படம் ஒருவழியாக ஆகஸ்ட் 10 தேதி அதாவது நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தனர் படம் ஆக்சன், எமோஷனல்,  காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால்  என்ஜாய் பண்ணி பார்த்தனர் மேலும் நல்ல விமர்சனமே இதுவரை இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. அதனால் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலும் நன்றாகவே இருந்து வந்துள்ளது.

ஆம் இந்தியா முழுவதும் சுமார் 45 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தில் வசூல் அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில்  இருக்கும் மைனஸ் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

முதல் பாதி ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என இருந்ததால் விறுவிறுப்பாக போனது ஆனால் இரண்டாவது பாதியாக அப்படியே மாறிப்போனது ஆரம்பத்திலேயே  டல் அடித்தது மேலும்  சுனில், தமன்னா வரும் காட்சிகள் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை காவலா பாட்டுல ரஜினி தமன்னா ஆடி இருந்தா கூட நல்லா இருக்கும் சுனில் அப்பப்ப வந்து போறது மொக்கையா இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் காட்சி நன்றாக இருந்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் அவரை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் நெல்சன் தவறவிட்டார் அதேபோல மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியவர்களுக்கு தீம் மியூசிக் ஒர்க் அவுட் ஆனாலும் அவர்களுக்கு ஆக்சன் பெரிதாக படத்தில் இல்லை அது சற்று கவலையை கொடுக்கிறது வசந்த் ரவி கடைசி காட்சிகளில் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ரொம்ப கேஷுவலாக இருப்பார்.

அதுவே ரசிகர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது. விநாயகன் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் தெள்ள தெளிவாக காட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.. ரஜினி, அனிருத்தை நம்பி ஜெயிலர் படத்தை பார்க்க போகலாம்..

Leave a Comment