ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியா ரோலில் யார் நடிக்கிறார் தெரியுமா.. இந்திய சினிமாவே அதிர போகுது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. கூலி திரைப்படத்தை  தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

ஜெயிலர்  முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜெயிலர்  இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்து அவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ஜெயிலர்  2 வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ஜெயிலர்  2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் ஜெயிலர்  2 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போகிறது அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் ஜெயிலர்  2 திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ் ஜே சூர்யா, சூரஜ், வெஞசர மூடு சந்தானம், பகத்வாஸில், தமன்னா, வித்யா பாலன் ஆகியவர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர்  2 திரைப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இந்த திரைப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.