ஐபிஎல் – லில் கோப்பையை ஜெயிச்சா போதாது.. இந்திய அணி நீ எதிர்பார்க்கிறது போன்று சாதாரணமாக இருக்காது – புதிய கேப்டன் ரோஹித்துக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்.

இந்திய அணியில் தற்போது அதிரடியான மாற்றங்கள் பல நிகழ்ந்து வருகின்றன அந்த வகையில் இந்திய அணியின் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியின் புதிய கேப்டன்னாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 17ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் மூன்று 20ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

அதன்பின் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. அதை தொடர்ந்து இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து பல போட்டிகளில் பல பரிட்சை நடத்த இருக்கிறது. இது போதாத குறைக்கு டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து பங்குபெற இருக்கிறது.

இந்திய அணி. இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் ஷர்மாவின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்  ரோஹித் ஷர்மாவுக்கு சில கருத்துகளை குறிப்பிட்டு பேசி உள்ளார் அதில் அவர் கூறியது:

அணியை வழிநடத்த ரோஹித் சர்மா தயாராக இருக்கிறார் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கிறது ரோகித் சர்மா இந்தியாவில் நடத்தப்பட்ட IPL கோப்பையை  5 முறையை வென்ற உள்ளார்.

ஆனால் மாநில அளவில் அளவில் வழிநடத்துவது வேறு தேசிய அணியை வழிநடத்துவது வேறு ஐபிஎல் 5 முறை கோப்பையை வெல்லவது போல இருக்காது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிப்பது என்பது சாதாரணமாக இருக்க முடியாது. அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் தான் உங்களது திறமையை பார்க்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment