ரஜினியின் மகனாக ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்.. வாய்ப்பைத் தட்டி தூக்கிய வசந்த் ரவி

Jailer Movie: ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக முதலில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்த நிலையில் ஆனால் அவரால் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது அது குறித்த தகவலை பார்க்கலாம். ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.

அப்படி ஜெயிலர் படத்தின் ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்பொழுது அப்படி ஒரு சுவாரசியமான தகவல் குறித்து பார்க்கலாம். ரஜினி தனது பேரன் ஷூக்கு பாலிஷ் போடும்பொழுது மகன் ஷூவுக்கும் பாலிஷ் போடுவார் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் பேரன் ஷூவுக்கு பாலிஷ் போடுற வரைக்கும் ஓகே அது என்ன மகனுக்கு எங்க தலைவரை இப்படி எல்லாம் காட்டக்கூடாது என நெல்சனை விமர்சனம் செய்தனர்.

ஆனால் தந்தை மகன் பாசத்தை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற காட்சியை வைத்துள்ளார் என்பது தெரிய வர பிறகு ஏற்றுக் கொண்டார்கள். ரஜினியின் மகனாக வசந்த் ராவி நடித்திருந்த நிலையில் ரஜினி-வசந்த் ரவி இவர்களுக்கு இடையேயான காட்சி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

ஹீரோவாக வசந்த் ரவி நடித்து வந்தாலும் ரஜினியின் மகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். அப்படி ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் வசந்த் ரவி. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தாராம்.

அதாவது இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஜெய்யிடம் தான் பேச்சுவார்த்தை நடக்கப்பட்டதாம் அவரும் ரஜினியுடன் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தாராம். ஆனால் சில காரணங்களினால் அவரால் ரஜினியின் மகனாக ஜெயிலர் படத்தில் நடிக்க முடியாமல் போக பிறகு வசந்த ரவி நடித்துள்ளார் இவ்வாறு இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment