ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி.!மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலை.! !

0
jagan mohan reddy
jagan mohan reddy

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து பல நல்ல திட்டங்களை அதிரடியாக கொண்டு வருகிறார். மதுக்கடைகளை குறைக்கும் திட்டம், ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கு கொண்டுவரும் திட்டம், விவசாயிகளுக்கு நிதி உதவி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி, ஆட்டோ கால்டாக்சி ஓட்டுனர்களுக்கு நிதி உதவி, என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இது அனைத்தும் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து 100 நாட்களுக்குள் இந்த திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டு உள்ளன, அந்த வகையில் அடுத்ததாக ஆந்திராவில் அரசு வேலைக்கான ஏ பி பி எஸ் சி தேர்வுகளில் நேர்முகத்தேர்வை நீக்குவதற்கு அதிரடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது, இந்த முடிவு 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 2020 க்கு பிறகு அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் மதிப்பெண் அடிப்படையைக் கொண்டு மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில அரசுப் பணி தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு குறித்து ஆலோசித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இடம் பெற வேண்டிய பணியிடங்கள் குறித்தும் தேர்வு விவரங்கள் குறித்தும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.