ஒரு நாள் முதல்வன் போல் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள்.! ஜெகன் மோகன் பலே திட்டங்கள் மக்கள் அமோக வரவேற்ப்பு

0
YS-Jagan-Mohan-Reddy
YS-Jagan-Mohan-Reddy

ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஆந்திராவை புரட்டிப் போட்டு வருகிறார் ஜெகன் மோகன், இவர் கொண்டுவரும் சட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே, பூரண மதுவிலக்கு, இலவச கல்வி, இலவச மருத்துவம் என அனைத்தையும் டார்கெட் செய்து மாற்றி அமைத்து வருகிறார்.

அதேபோல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் சேவை, அது மட்டுமில்லாமல் குழந்தை தொழிலாளர்களை தடுக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு அனுப்பும் அனைத்து தாய்மார்களுக்கும் ரூபாய் 15,000 வழங்கியதோடு தரமான ரேஷன் பொருட்களை வீடு தேடி கொடுத்து வருகிறார், அது மட்டுமில்லாமல் முதியவர்களுக்கான உதவித்தொகையை 1500 லிருந்து 2300 வரை உயர்த்தி உள்ளார், மேலும் காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை, மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு நாள் எந்த புத்தகமும் எடுத்த வராமல் தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம்.

பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுத்து  வருகிறார். இப்படி அடுத்தடுத்து நாம் சினிமாவில் பார்த்த ஒரு நாள் முதல்வர் போல் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் வாரத்திற்கு ஒரு முறை பள்ளிகளில் தங்க வேண்டும், அதேபோல் அரசு மருத்துவமனைகளிலும் தங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார் அப்போதுதான் அங்கே இருக்கும் குறைகளை கண்டுபிடித்து தீர்க்க முடியும் என கூறினார்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு இலவச பேருந்து வசதியை அடுத்த திட்டமாக அமல்படுத்தி வருகிறார். இதை பார்த்த தமிழ் மக்கள் இதுபோல் முதல்வர் நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சத்தையே இன்னும் தீர்க்கவில்லை நமது அரசியல் தலைவர்கள் ஆனால் அங்கோ அடுத்த பல திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.