ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு.! குவியும் பாராட்டுகள்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

பொதுவாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் முதல்வர் என பலரும் கூறுகிறார்கள் ஏனென்றால் மக்களுக்காக பல சேவைகளையும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், அதுமட்டுமில்லாமல் கல்வி, சுகாதாரத் துறை என அனைத்திலும் இருக்கும் குறைபாடுகளை நீக்கி முறையாக இயங்க வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒய் எஸ் ஆர் வாகனம் மித்ரா திட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில் ஆண்டுதோறும் வாகன பிட்னஸ் சான்றிதழ் பெறுவதற்கும் வாகன காப்பீடு பெறுவதற்கும் பத்தாயிரம் ரூபாய் செலவு ஆவதாக ஆட்டோ ஓட்டுனர் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் அவர்களின் துயரங்களை துடைக்கவே இந்த திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன்.

இந்த திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Leave a Comment