தளபதி விஜய்யை கிண்டலடித்த நடிகர் தனுஷ்..! ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியால் எழுந்தது புது பிரச்சனை..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இத்திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தளபதி விஜய் தனுஷ் கண்கள் செய்துள்ளதாக புது பிரச்சனை எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு கேங்க்ஸ்டர் ரோலில் நடித்து இருப்பார் மேலும் இந்தத் திரைப்படத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட ஒரு பெரிய கேங்ஸ்டர் கும்பல் வளம் வரும்.

அந்த கும்பலுக்கு எதிராக பல்வேறு மக்களுக்கும் ஒரு தமிழர் ஆதரவாக இருப்பார்.  ஆனால் இந்த திரைப்படத்தில் அகதிகளை விரட்டும் கேங்ஸ்டர் தனுஷை கொண்டு வந்து அந்த தமிழ் தாதாவை மிரட்டுவார்கள்.

பின்னர் சரியான பிளான் போட்டு அகதிகளுக்கு அரவணைப்பாக இந்த தமிழனை தனுஷை வைத்து கொன்று விடுவார்கள். அதன் பிறகு  அவர்களுடைய கஷ்ட நஷ்டம் தெரிந்த தனுஷ் அவர்களுக்கு எதிராக மாறிவிடுவார் இதனால் அவர்களை எதிர்த்து போராட ஆரம்பித்து விடுவார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் தளபதி விஜய்யை இந்த திரைப்படத்தில் கிண்டல் செய்துள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.  அதாவது இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் அணில் பையன் நடுங்கி விட்டான்..! என்று கூறிய வசனம் தளபதி விஜயை கிண்டல் செய்வது போல் இருக்கிறது என நெட்டிசன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Leave a Comment