திரைப்படத்தில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்த தனுஷ் பட நடிகையா இது..? இப்படி புகையை போடுறாங்களே..!

jagame thanthiram movie actress latest image: சமீபத்தில் திரை உலகில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இத்திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

நமது நடிகை மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்தும் இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஏராளமாக கவர்ந்து விட்டார். ஆனால் தொடர்ந்து தமிழில் பிரபலமான நடிகையாக வருவார் என்றால் அது சந்தேகம்தான்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஜகமே தந்திரம் திரைப்படமானது ஓரளவு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. இந்நிலையில் நமது நடிகை இதற்கு முன்பாக  விஷால் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இத்திரைப்படம் ஒரு நாள் கூட ஓடாமல் படு தோல்வியுற்றது.

இந்நிலையில் எப்படியாவது திறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை விதவிதமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் அந்த வகையில்தான் புகைபிடிக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்கு போல் திரைப்படத்தில் நடித்து விட்டு இப்படிபுகையை போடுறீர்களே எனக் கிண்டல் அடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவ்வாறு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்த நடிகை இப்படி ஒரு செயலில் ஈடுபடுவது  அவருடைய கேரியரில் பாதிக்கும் என்பது அவருக்கு தெரியாதா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ishwariya lakshmi
ishwariya lakshmi

Leave a Comment