ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து புஜ்ஜி என்ற வீடியோ பாடல் இதோ. ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

0

நடிகர் தனுஷ் அசுரன், பட்டாஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, ஜகமே தந்திரம் திரைப்படம் முடிவடைந்த நிலையில்  இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

மேலும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சன நடராஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை தீபாவளி என்பதால் ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து புஜ்ஜி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், அனிரூத் தன்னுடைய சொந்த குரலில் பாடியுள்ளார்.

படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.