“லியோ” பட வில்லனுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.. 16 வருடங்களுக்குப் பிறகு ஹீரோ அவதாரம்.! யார் அது தெரியுமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து அவர் எடுத்த விக்ரம் படம் தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படம் ஏனென்றால் இந்த படம் தான் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க லோகேஷ் கனகராஜ் தளபதி உடன் கைகோர்த்து “லியோ” என்னும் தலைப்பில் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா பிரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் நடிக்கும் நடிகர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என பலரும் சொல்லி வந்த நிலையில் மன்சூர் அலிகான் அதிர்ஷ்டம் அடித்து உள்ளது. இவர் லியோ படத்தில் இணைந்த நேரம் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லனாகவே நடித்து ஓடிய இவர் கதாநாயகனாக 1993 ஆம் ஆண்டு வெளியான “காத்தவராய கிருஷ்ண காமராஜன்” என்ற படத்தில்..

மன்சூர் அலிகான் கதாநாயகனாக முதலில் நடித்தார் அதன் பிறகு ராவணன், சிந்து பார்த்து போன்ற படங்களில் நடித்தார் அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக 2007 ஆம் ஆண்டு “என்னை பார் யோகம்” வரும் திரைப்படத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்தார்.

அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்பொழுது தான் அவர் ஹீரோவாக நடிக்கிறார். அந்தப் படத்திற்கு “சரக்கு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கர் உள்ளார். லியோ படத்தில் இணைந்த நேரம் தான் நடிகர் மன்சூர் அலிகான் இந்த வாய்ப்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

Leave a Comment