நிரூப் இப்படிப்பட்டவர் ஆனால் வருன்.? உண்மையை போட்டு உடைத்த ஐக்கி பெர்ரி வைரலாகும் வீடியோ.!

இந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார்.

ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் டாஸ்கில் ஒவ்வொருவராக வெளியே செல்கிறார்கள். அந்தவகையில் கடந்த வாரம் நாமினேஷன்  தேர்வு செய்யப்பட்டவர் ஐக்கி பெர்ரி. இவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற ஐக்கி பெர்ரி முதன்முறையாக ரசிகர்களுக்கு சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் நிரூப் மற்றும் வருண் குறித்து பேசியுள்ளார்.  அந்த வீடியோவில் அவர் கூறியதாவது நிரூப் குறித்து வெளியே என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னைப் பொறுத்தவரை நிரூப் மிகவும் தந்திரமாக விளையாடுகிறார் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அவர் நியாயமாக தான் விளையாடுகிறார் குறிப்பாக நாங்கள் விளையாடிய பொம்மைதா டாஸ்கில் அவரைப்பற்றி நான் நன்றாக புரிந்துக்கொண்டேன் நாங்கள் இருவரும் விளையாடிய போது என்னை அவர் கைப்பாவையாக பயன்படுத்தியதாக பிக் பாஸ் வீட்டில் பலரும் குற்றம் சாட்டினார்கள் ஆனால் அதையெல்லாம் உண்மையாக கிடையாது.

நாங்கள் பொம்மை டாக்கில் இருவரும் நேருக்கு நேராக மோதிக் விளையாடுவோம் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கட்டும் என்று தான் நாங்கள் கூறிக் கொண்டோம் அதை நிரூப் அவர்களும் ஏற்றுக் கொண்டார் என அந்த வீடியோவில் ஐக்கி பெர்ரி கூறியுள்ளார்.  அதேபோல் வரூன் குறித்த கேள்விக்கு வருண் மிகவும் நன்றாக விளையாடுகிறார் என்னை பொருத்தவரை அவர் யாரிடமும் பர்சனலாக எதையும் எடுத்து விளையாடுவது கிடையாது.

அதேபோல் என்னிடம் பர்சனலாக கோபம் காட்டியதே கிடையாது ஆனால் நிரூப் அவர்கள் உடன் விளையாடும் பொழுது பர்சனலாக சிலவற்றை எடுத்துக் கொள்வது போல் எனக்கு தோன்றுகிறது என கூறினார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment