சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மாதிரி நான் ஏற்கனவே பண்ணிட்டேன் – பிரபல நடிகர் பேச்சு.!

அருண் விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கூடிக் கொண்டிருக்கிறார் இவர் என்னை அறியாமல் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகுதான் அவரது சினிமா மார்க்கெட் வளர தொடங்கியது. இந்த படத்தை தொடர்ந்து சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து வருகிறார் .

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குற்றம் 23, தடம் ஆகிய படங்கள் வெற்றி படங்கள் தான் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அசத்தியது மேலும் வசூலிலும் வாரி குவித்தது அதனை தொடர்ந்து அருண் விஜய் கைவசம் சினம், பாக்சர், பார்டர், தமிழ் ராக்கர்ஸ் அக்னி சிறகுகள் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனால் அருண் விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருண் விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒன்றாக ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அருண் விஜய் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல நான் அப்பவே பண்ணிட்டேன். விக்டர் கதாபாத்திரம், தடம் படத்தில் பண்ணின நெகட்டிவ் ரோல் என அப்பவே செய்த அசத்தியுள்ளேன் இருந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் வெயிட்டான ரோல் தான் அதோட இரண்டாவது பாகத்தை பார்க்க உங்கள மாதிரி நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என வெளிப்படையாக பேசினார் நடிகர் அருண் விஜய்.

arun vijay
arun vijay

விக்ரம் படத்தில்  சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனால் விக்ரம் இரண்டாவது பாகத்தை பார்க்க பெரிய அளவில் மக்களும் சினிமா பிரபலங்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Leave a Comment