விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்த மூன்று நடிகைகளில் இவங்கதான் வெயிட்..! Heart எந்தப் பக்கம் இருக்குது..?

vijay-sethupathi-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் பலர் நடித்த நிலையில் மூன்று சின்னத்திரை நடிகைகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை உதயநிதி மற்றும் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில்  விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்த 3 சின்னத்திரை நடிகைகள் யார் யார் என்றால் சிவானி, மைனா நந்தினி, மற்றும்  மகேஸ்வரி ஆகியவர்கள் அவர்கள் ஆனால் இவர்களில் மிகவும் இந்த திரைப்படத்தின் மூலம் ஃபேமஸான நடிகை பற்றி பார்க்கலாம் வாங்க.

vijaysethupathi-1
vijaysethupathi-1

மைனா நந்தினி இவர் விஜய் டிவி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அது மட்டும் இல்லாமல் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  பெருமை சேர்த்தது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில்  இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சிவானி இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்தவகையில் பகல் நிலவு சீரியல் மிகவும் பிரமாண்டமாக அமைந்தது என்று சொல்லலாம் இதன் பிறகு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து வடிவேலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜே மகேஸ்வரி இவர் சின்னத்திரையில் பிரபல  நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் பானா காத்தாடி, இரண்டு, சென்னை-28 போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் விக்ரம் திரைப்படத்தில் நடித்தது பலரையும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதி தனது 3 மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பொழுது அவற்றில் வலது பக்கம் உட்கார்ந்து புகைப்படம் எடுக்க  மகேஸ்வரியும் சிவாணியும் போட்டி போடுவார்கள் அதில் விஜய்சேதுபதி இதயம் எந்த பக்கம் இருக்கிறது என்ற வசனத்தை கூறி மகேஸ்வரியை இடதுபக்கம் அமர வைப்பார்.  இந்த டயலாக்கை தற்போது சமூக வலைதள பக்கத்தில் மகேஸ்வரி பாராட்டி வருகிறார்கள்.

vj maheshwari-1