சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா..! இவானா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள்.!

Ivana : தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது அதிலும் புதுமுக நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் அப்படியே அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகி வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வகையில் இடம் பிடித்தவர் தான் நடிகை இவானா. இவர் முதன் முதலாக பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது அதனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிக எளிதாக அடைந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு  கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.

Ivana
Ivana

இன்றைய இளைய தலைமுறையினர் எப்படி போய்க்கொண்டிருக்கிறார்கள் அவர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவானா புகழையும் பாராட்டையும் பெற்றார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல மடங்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. தற்பொழுது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள எல்ஜிஎம் திரைப்படத்தில் இவானா நடித்துள்ளார்.

Ivana
Ivana

எல்ஜிஎம் திரைப்படம்  தற்பொழுது திரைக்கு வந்துள்ளது திரையில்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இவானா கல்வானா என்ற திரைப்படத்திலும் காம்ப்ளக்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பொதுவாக இளம் கதாநாயகிகள் நடித்த திரைப்படம் வெளியானாலே அவர்கள் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்கள்.

Ivana
Ivana

அந்த வகையில் நடிகை இவனா எல் ஜி எம் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது புகைப்படத்தில் புடவை அணிந்து தேவதை போல் காட்சியளிக்கிறார் நடிகை இவனா.

Ivana
Ivana

Leave a Comment