பெரியவருக்கு ஓகே சின்னவர்னா இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா Amount வேண்டும்.! கரார் காட்டிய நயன்தாரா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார் இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் தற்பொழுது ஷாருக்கான் அவர்களுடன் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறது வாடகை தாயை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் இந்த தம்பதிகள். நயன்தாராவின் திருமணம் ஷாருக்கான் ரஜினி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் நயன்தாராவின்  கோல்டு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது மலையாள பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கனெக்ட் நயன்தாரா 75 இறைவன் ஆகிய திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

மற்ற நடிகர் மற்றும் நடிகைகளை போல் நயன்தாராவும் தன்னுடைய சினிமா கேரியரில் பல ஹிட் திரைப்படங்களை தவற விட்டுள்ளார் அதில் ஒன்றுதான் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய பையா திரைப்படம். கார்த்தி நடிப்பில் வெளியாகிய பையா திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் காதல் திரைப்படமாக வெளியாகி ரசிகர் மனதில்  நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதற்கு நயன்தாராவை தான் அணுகியுள்ளார் லிங்குசாமி ஆனால் நயன்தாரா சம்பளம் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் கார்த்தி உடன் பையா திரைப்படத்தில் தவறவிட்டாலும் மீண்டும் கார்த்தி உடன் காஷ்மோரா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

காஷ்மோரா திரைப்படத்தில் ஃபிளாஷ்பாக் காட்சியில் நடித்திருந்தாலும் இந்த ஜோடி சிறப்பான ஜோடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என அந்த பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல் நயன்தாரா கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன்  கஜினி திரைப்படத்திலும் நடித்திருந்தார்  அதுமட்டுமில்லாமல் மாசு என்கிற மாசிலாமணி, ஆதவன் என சூர்யாவுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அப்படி இருக்கையில் கார்த்தி இளம் நடிகர் என்பதால் நயன்தாரா சம்பளம் அதிகமாக கேட்டிருக்கலாம் என ஒரு சிலர் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version