வெளியாகி ஒரு வருடத்தை கடந்த கேஜிஎப் 2 .! கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது.

கே ஜி எஃப் 2 படத்துடன் விஜயின் பீஸ்ட் படம் வெளியானது இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியான நிலையில் விஜயின் பீஸ்ட்டை விட கே ஜி எஃப் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இந்த இரண்டு தரப்பு ரசிகர்களும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஹோஷ்டேக் என சமுக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது இதை கொண்டாடும் விதமாக  ஆக்சன் மற்றும் நாடகத்தை மீட்டெடுக்க தயாராகுங்கள் என்ற தலைப்புடன் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் கே ஜி எஃப் 3 ரிலீஸ் கேட்டு வரும் நபர்களால் கருத்துக்கள் பகுதி நிரம்பியது.

அந்த வகையில் சில ரசிகர்கள் கே ஜி எஃப் 3க்காக காத்திருக்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் அந்த கமெண்டை நாங்களும் உணர்கிறோம் என்று பல ரசிகர்கள் எதிரொலித்து வருகின்றனர். இப்படி ரசிகர்கள் கேஜிஎப் 3 திரைப்படம் எப்போது உருவாகும் என்று சமுகவலைதளத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேஜிஎப் சாப்டர் 1 மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 இரண்டுமே பிரம்மாண்ட வெற்றியை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் Monster cut வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment