thunivu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த திரைப்படம் தான் துணிவு இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியது , இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. துணிவு திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
ஜிப்ரான் இசையில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் சில்லா சில்லா பாடல் காசேதான் கடவுளடா என அனைத்து பாடலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக்கியது இந்த இரண்டு திரைப்படங்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில் ஒரு மாதம் கடந்தும் இன்னும் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் வகையில் துணிவு திரைப்படம் பிரபல OTT இணையதளமான netflix இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாக்கியது. துணிவு திரைப்படம் ஓடிட்டு இணையதளத்தில் வெளியாகி வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் OTT யில் வெளியான பிறகும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் netflix இணையதளத்தில் வெளியான துணிவு திரைப்படம் இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாக தற்பொழுது netflix இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல் உலக அளவில் நான் இங்கிலீஷ் பிரிவில் முதல் மூன்றாவது இடத்தில் துணிவு திரைப்படம் இடம் பெற்றுள்ளது அதேபோல் நான்காவது இடத்தில் துணிவு ஹிந்தி பதிப்பும் இடம்பெற்றுள்ளது இந்த நிலையில் தற்பொழுது நடப்பு வாரத்திலேயே தமிழில் 40 லட்சத்திற்கும் 50,000 மணி நேரமும் ஹிந்தியில் 37 லட்சத்து 30000 மணி நேரமும் துணிவு திரைப்படம் பார்க்கப்பட்டுள்ளதாக தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்தியா, பக்ரைன், வங்கதேசம், மலேசியா மாலத்தீவு, மோர்சியஸ், நைஜீரியா, ஓமன், பாகிஸ்தான், கர்த்தர், சிங்கப்பூர் இலங்கை, ஐக்கிய அமீரகம் என 13 நாடுகளில் டாப் 10 பட்டியலில் துணிவு திரைப்படம் இடம் பெற்றுள்ளது இது அஜித் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
It’s a CHILLA DAY because…
Now #Thunivu is among the Top-3 most watched films globally in the non-English category last week on Netflix! 🥳🔥 pic.twitter.com/MboFIixsxq
— Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023