என் வாழ்க்கையை நாசமாக்கியது வடிவேலு தான்.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிரபல நடிகர்

vadivelu-
vadivelu-

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர் இருக்கின்றனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் டாப்பில் இருப்பார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் நாகேஷ் அவர்களை தொடர்ந்து கவுண்டமணி, செந்தில், விவேக் பெரிய அளவில் பேசப்பட்டனர் அவர்களை தொடர்ந்து இப்பொழுது வடிவேலு பெரிய ஒரு காமெடி நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இவருக்கு அடுத்து யோகிபாபு, சூரி போன்றவர்கள் மிகப்பெரிய ஒரு நட்சத்திரங்களாக ஜொலிப்பார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.. தற்பொழுது வடிவேலுக்கு  ஹீரோவாகவும், காமெடியன்னாகவும் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது கடைசியாக கூட நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்தும் பல பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளன. இப்படி இருந்தாலும் வடிவேலு பற்றி பல புகார்களும் அவ்வபொழுது வந்த வண்ணமே இருக்கிறது. வடிவேலு ரொம்பவும் திமிர் பிடித்தவர் மற்றவர்களை வளரக்கூடாது என நினைப்பவர் அதனால் தான் வடிவேலுவின் சினிமா பயணம் கொஞ்சம் கொஞ்சமாக கிழே போய் கொண்டிருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்  பிரபல காமெடி நடிகர் வடிவேலு குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் அல்ல.. காமெடி நடிகர் காதல் சுகுமார் தான்.. இவர் விருமாண்டி, பாபா, காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயரையும், புகழையும் அடைந்தவர் இப்படிப்பட்ட சுகுமாருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அவர் கூறியது..

sukumar
sukumar

என் வாழ்க்கையை நாசமாக்கியது வடிவேலு தான்.. இங்கிலீஷ்காரன், சச்சின், ஆறு போன்ற படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவருடன் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு கூறியதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது. இதனால் நாளடைவில் நான் அடையாளம் தெரியாமல் போய்விட்டேன் என சுகுமார் தெரிவித்துள்ளார்.