13 வயதிலேயே சிகரெட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன் – என்னுடைய வாழ்க்கையை புரட்டி போட்டது சூர்யா படம் தான்..! ரகசியத்தை பகிர்ந்த வெற்றிமாறன்.

இயக்குனர் வெற்றிமாறன் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார். அந்த வகையில் இப்பொழுது கூட இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன் முதல் பாகம் வெகு விரைவிலேயே வெளிவர உள்ளது.

விடுதலை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர்  சூர்யாவுடன் கைகோர்த்து வாடிவாசல் என்னும் படத்தையும் அவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிமாறன். 13 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்கிவிட்டார். இதை அவரால் நிப்பாட்ட முடியவில்லை தொடர்ந்து 33 வயது வரை அந்த பழக்கத்தை கைவிடவேவில்லை..

ஒரு கட்டத்தில் அவர் ஒரு நாளைக்கு மட்டுமே 160 கற்கும் அதிகமான சிகரெட் பிடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.  வெற்றிமாறனுக்கு இந்த பழக்கத்தை கைவிட நினைத்தாலும் ஆனால் அவரது முடியாமல் போனது. தொடர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கே பயம் வந்துவிட்டதாம் பின் மருத்துவரை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர் ஆஞ்சியோ எடுத்து பார்த்தால் தெரிந்துவிடும்..

ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் இந்த பழக்கத்தை விடுங்கள் என கூறினார் பின் ரிப்போர்ட் வெளிவந்து பார்த்தால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூற அப்ப தான் மனசு நிம்மதியானதாம். இருந்தாலும் இந்த பழக்கத்தை என்னால் விடவே முடியவில்லை இந்த சமயத்தில் தான் இந்திய அணியின் பிட்னஸ் கோச் பாசு சங்கரிடம் உதவி கேட்டேன். அவரிடம் ஆறு மாதம் பயிற்சி எடுத்த இருந்தேன். அனாலும் அந்த பழக்கமும் என்னை விடாமல் துரத்தியது..

கடைசியாக வாரணம் ஆயிரம் படத்தில் இந்த சிகரெட் பழக்கம் எல்லாம் இருப்பதாக கதை அமைப்பு இருந்தது. இந்த படத்தை பார்க்க சென்றேன் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்து ஒரு சிகரெட் அடித்தேன் இதுதான் கடைசி என கூறினேன். அன்றிலிருந்து இப்பொழுது வரை தான் சிகரெட்டை நான் தொடவே இல்லை என கூறியுள்ளார்.

Leave a Comment