எனது பந்துகளை மிக சாதாரணமாக அடித்து ஆடுவது ரோஹித் ஷர்மா தான் -பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஓபன் டாக்.

0

சமீப காலமாக பாகிஸ்தான் அணிகள் மிக சிறப்பாக பந்துவீசி வருபவர் ஹசன் அலி. 26 வயதான இவர் இதுவரை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மேலும் பஸ்ட் பவுலிங்கில் இவர் முக்கியமான நேரத்தில் பல்வேறு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற உதவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹசன் அலி தான் பந்துவீசியதிலேயே மிக கடினமான பேட்ஸ்மேன் இவர்தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர் கூறியது நான் பல முன்னணி வீரர்களும், அதிரடி ஆட்டக்காரர்களுக்கும் பந்துவீசி உள்ளேன் அவர்களில் என்னை மிகப்பெரிய அளவில் தாக்கியது யார் என்றால் ரோகித்சர்மா தான் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.

ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடினார்கள் பல தொடர்களில் ரோகித் பந்துவீச எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் அன்று அவரது நாளாக இருந்திருந்தால் எனது பந்துகளை அவர் கண்டிப்பாக வெளுத்து வாங்கிய இருப்பார் ரோஹித்.

haasan ali
haasan ali

மிகவும் அபாரமான வீரர் மைதானத்தில் எல்லா திசைகளிலும் அவரால் அடித்து ஆட முடியும் பந்து லைனுக்கு வந்தால் அதை தாமதமாக ஆடுவார். மேலும்  புல் சாட்டுகள் எல்லோரும் அவ்வளவு எளிதில் தூக்கி அடிக்க முடியாது அதை மிக லாபகரமாக கையாள்வதில் ரோகித் சர்மாவை அடிச்சிக்க ஆளே இல்லை எனவும் தெரிவித்தார்.

அவரது ஆட்டத்தை நான் ரொம்ப விரும்பி பார்பேன் எனவும் தெரிவித்தார்.