விஜயின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது இவர்தான்.? பல வருடமாக மறைந்து கிடந்த ரகசியம்…

VIJAY
VIJAY

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் எல்சியு-வில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலாக இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் அவரை வளரவிடாமல் தடுத்தது பிரபலம் ஒருவர் என்பதை குறித்து நெடிசங்கள் கூறி வருகின்றனர். அதாவது நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த நேரத்தில் இயக்குனர் சங்கருக்கும் எஸ் எஸ் சி க்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்படி இருக்கும் நிலையில் முதல்வன் படத்தில் விஜய் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது அவருடைய வளர்ச்சியை தடுக்க அவருடைய அப்பா தான் காரணம் என்று நெடிசங்கள் கூறி வருகின்றனர்.