துணிவையே ஜெயிக்க முடியல இதுல அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என சொல்றது.! வாரிசு படத்தால் விஜய்க்கு வந்த சோதனை…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்களுக்கு அடுத்து சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இதில் நடிகர் அஜித் அவர்கள் தற்போது ஹெச் வினோத் உடன் இணைந்து தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தை கொடுத்துள்ளார் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியிலும் குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இரண்டு திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள் அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் பூர்த்தி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டு படங்களும் வசூலிலும் நல்ல வேட்டை அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் விஜய் தான் நம்பர் ஒன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து தல ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில் முதல் நாள் வசூலை வைத்து இப்ப சொல்லுங்க யார் நம்பர் ஒன் என்று எனக் கூறி மறுபடியும் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கலை வம்பிழுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பல தகவல்கள் வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற ஒரு அருகதை வேண்டும் என பலரும் ட்ரோல் செய்தனர் இந்த நிலையில் மூன்றாவது நாள் வசூலை வெளியான நிலையில் நடிகர் விஜயை நீ எல்லாம் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என்று கூறி வருகிறார்கள்.

வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் துணிவு திரைப்படம் 43 கோடி வரை வசூலித்து உள்ளது மேலும் வாரிசு திரைப்படம் 40 கோடி மட்டும் தான் வசூலித்துள்ளது. இதனால் யார் சூப்பர் ஸ்டார் யார் நம்பர் ஒன் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment