விருது வாங்கிய நடிகருடன் ஒரே ஒரு திரைப்படம் தான்.!30 வயது நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்.!

தமிழ் திரை உலகில் ஒரு நடிகை ஒரு திரைப் படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்தால் அந்த நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கூறவேண்டுமென்றால் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் தனது நடிப்பை இயல்பாக காட்டி பின்பு நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது ரஜிஷா விஜயனும் வலம் வருகிறார் ஆம் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கண்ணன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் தற்போது ரஜிஷா விஜயன் அந்தத் திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்ததன் மூலம் தமிழில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிக்கும் திரைப்படத்தில் இவர் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

karthi
karthi

ஆம் கார்த்தி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் சுல்தான் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக ஓரளவு வசூல் செய்து சாதனை படைத்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சர்தார் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது மட்டுமல்லாமல் கார்த்தி நடிக்கும் இந்த சர்தார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

rajisha vijayan
rajisha vijayan

மேலும் இந்த திரைப்படத்தில் மட்டும் ரஜிஷா விஜயன் தனது நடிப்பை இயல்பாக காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றால் தமிழில் இவரும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொள்வார் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment