சினிமாவிற்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது மீனாவை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா.?

தமிழ்,ஹிந்தி,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் மீனா இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஆனால் மீனாவின் 40 வருட சினிமா துறையில் அவரை முதன் முதலில் தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தியவர் யார் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதில் மீனாவை தமிழ் திரை உலகில் சிவாஜி தான் அறிமுகபடுத்தினாராம் மேடை நாடகத்தில் மீனாவின் நடிப்புத் திறமையை பார்த்து சிவாஜி மீனாவிற்கு வாய்ப்பு கொடுத்தாராம் மேலும் அவரது திருமண வாழ்க்கையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது அவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

மீனாவைப் போலவே அவரது மகளும் விஜயுடன் தெறி திரைப்படத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிவாஜிதான் மீனாவை அறிமுகப்படுத்தினாரா என ஆச்சரியப்பட்டு இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.

meena5

மேலும் ஒரு சில ரசிகர்கள் மீனா ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் மீனா இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து மீனா நடிப்பில் வெளியான எஜமான்,சேதுபதி ஐபிஎஸ், நாட்டாமை,முத்து போன்ற பல திரைப்படங்கள் பல சாதனைகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version