அம்பத்தி ராயுடுவை தூக்கி எறிந்த இந்தியா.! எங்க நாட்டுக்கு விளையாடுவாங்க அழைப்பு விடுத்து ட்வீட் போட்ட ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.! அதிர்ச்சி தகவல்

0

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா டாஸ் வென்று 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் எடுத்தது 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 286 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அதனால் 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்காத அம்பத்தி ராயுடுவை எங்கள் நாட்டுக்காக விளையாட வரும்படி ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான ஷிகர் தவான் விஜய் சங்கர் ஆகியோர்கள் காயம் ஏற்பட்டது, அதனால் பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து விலகினார்கள்.

முதலில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை தேர்வு செய்யப்பட்டபோது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது, குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஆன அம்பத்தி ராயுடுவுக்கு உலக கோப்பை போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது இதற்க்கு  பலரிடம் இருந்து விமர்சனம் எழுந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் தனக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் இதனால் தனது ஏமாற்றத்தை 3d ட்வீட் மூலம் மறைமுகமாக தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த உலகக் கோப்பை போட்டியில் வீரர்கள் காயமடைந்த பொழுதும் அம்பத்தி ராயுடுவை அழைக்கவில்லை அதற்கு பதிலாக ரிஷப் பாண்ட்ய மற்றும் மயங்க் அகர்வால் தான் தேர்வு செய்யப்பட்டனர், இப்படி கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் அம்பத்தி ராயுடுவிற்க்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அம்பத்தி ராயுடு வுக்கு ஆதரவளிப்பதாக முன்வந்துள்ளது இதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அம்பத்தி ராயுடு தங்கள் நாட்டுக்காக விளையாடும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
ஐஸ்லாந்து இதற்கு முன் இது போல் கிண்டலான பதிவை வெளியிட்டு உள்ளார்கள் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, ஆனாலும் இது பற்றி இன்னும் அம்பத்தி ராயுடு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.