தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் பல துறைகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அப்படி கடைசியாக நிறைவு பெற்ற பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இசைவாணி. இவர் ஒரு கானா பாடகர் ஆவார். பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது சில கானா பாடல்களை பாடி மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார்.
இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் பாதியிலே எலிமினேட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் ஆரம்பத்தில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நடைபெறும் அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.
அப்படி ஐந்தாவது சீசனிலும் நடைபெற்றது அதிலும் அனைவரும் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறினர். அப்போது பேசிய இசைவாணி அவரது குடும்ப வறுமை மற்றும் கஷ்டம் பற்றி மட்டுமே கூறி வந்தார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி இருந்தது அவரது கணவரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த செய்தி அப்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இசைவாணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரது கணவர் குறித்து முதல் முறையாக பேசி உள்ளார். அவர் கூறியது எல்லா பெற்றோர்கள் போல எனது பெற்றோர்களும் திருமணம் செய்து வைத்தார்கள்.
நான் கானா பாடல் பாட பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த ஆதரவு எனது கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. இதனால்தான் அந்த வீட்டை விட்டு நான் வெளியேறி விட்டேன். தற்போது அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது அந்த குடும்பத்துடன்னும் நான் தொடர்பில் இல்லை என கூறியுள்ளார் இசைவானி.
