200 ரன்களுக்கு மேல் அடித்து புதிய உலக சாதனை படைத்த இஷான் கிஷன் – சச்சின், ரோகித் ஷர்மா சாதனை முறையடிப்பு..!

இந்திய அணி சமிபத்தில் நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலககோப்பை, நியூசிலாந்துடன் ஒரு நாள் தொடர் என அனைத்திலும் கோப்பையை நழுவவிட்டது அதேபோல வங்கதேச அணியுடன் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி கோப்பையை விட்டது

இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டி உள்ளது அந்த வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது இதனை அடுத்த களம் கண்ட இந்திய அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்.

போகப்போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பாக இளம் வீரரான இஷான் கிஷன்.. 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். இதில் 24 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் நான்காவது 200 ரண்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோகித் சர்மா ஆகியவர்கள் மட்டுமே 200 ரன் களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்பொழுது இந்த லிஸ்டில் இஷான் கிஷன் சேர்ந்துள்ளார் இதனை தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இஷான் கிஷான் ஒரு பக்கம் அதிரடி காட்ட மறு பக்கம் விராட் கோலி சதம் அடித்து அசத்தார்.

ishan-kishan-
ishan-kishan-

தொடர்ந்து இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது மொத்தமாக 409 ரன்கள் குவித்து உள்ளது  இந்த தொடரை வங்கதேச அணி தொடரைக் கைப்பற்றிய இருந்தாலும் இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய நிர்வாகம் சற்று சந்தோஷத்தில் இருக்கிறதாம்..

Leave a Comment