வசூல் ரேசில் ஜெயிச்சது விஜயின் பிகில் படமா.? மாஸ்டர் படமா.? உண்மையை ஊருக்கே சொன்ன பிரபலம்.

0

சமீபகாலமாக தளபதி விஜய் மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் அந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்லதொரு லாபத்தை ஈட்டியது என்றால் எல்லோருக்கும் சிறிது சலசலப்பு ஏற்படுத்துகிறது ஏனென்றால் விஜயின் ரசிகர்கள் அவரது படங்கள் நல்ல லாபத்தை ஈட்டியது என்கின்றனர்.

ஒரு பக்கம் திரை உலக வாசிகள் லாபத்தை பெறவில்லை எனக் கூறுவதுமாக இருந்து வருகிறது அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019 ஆண்டு வெளியான  பிகில் திரைப்படம்.திரையரங்கில் வெளிவந்த விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் பிகில் திரைப்படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது அதேபோல கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்த இரண்டு படங்களும் 250 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஆனால் எந்த திரைப்படமும் நல்ல லாபத்தை ஈட்டியது என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில் பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் தயாரிப்பு செலவை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் மாஸ்டர் திரைப்பட தயாரிப்பு பொருள் செலவு கம்மியாக இருப்பதால் லாபத்தை மிகப்பெரிய அளவில் ருசித்து உள்ளது என கூறினார்.