ராட்சசன் 2 படத்தில் நடிக்க போறாரா விஜய் சேதுபதி.. வெளியான சுவாரசியமான தகவல்.

0

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து அமலா பால் மற்றும் பல முன்னணி ஜாம்வான்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் தனது அசாதாரணமாக திறமையை வெளிப்படுத்தினர்.

படம் விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்பது சஸ்பென்சாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதனால் இந்த திரைப்படம் தொடர்ந்து ஓடியதோடு மட்டுமல்லாமல் வெற்றியையும் பெற்றது. இதனால் மற்ற மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தெலுங்கில் இந்த படம் ரீ  மேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் இயக்குனர் ரமேஷ்வர்மா என்பவர் இயக்கவுள்ளார் இந்த திரைப்படத்திற்காக விஜய்சேதுபதியை அவர் சமீபத்தில் அணுகி உள்ளார்.

அவரும் கதையை கேட்டுவிட்டு ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினா தெலுங்கு சினிமாவில் இன்னும் நல்ல மார்கெட்டை பிடிப்பதோடு குறைந்தது இன்னும் பத்து வருடத்திற்கு அவரது மார்க்கெட் குறையாமல் இருப்பதோடு சினிமாவில் உச்சத்தை தொடுவார் எனவும் பலரும் கூறுகின்றனர்.