விஜய் பட நடிகை கவினை காதலிக்கிறாரா.? நடிகை போட்ட பதிவால் குழம்பிபோன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் பிரபலமான அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸில் கவின் தான் முதலிடம் பிடிப்பார் என்றும் ரசிகர்கள் எண்ணியிருந்தனர் ஆனால் எதிர்பாராத விதமாக பாதியிலேயே பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

அதன் பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை பிடித்துக் கொடுத்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்று இருக்கிறது.

மேலும் டாடா திரைப்படத்தில் கவின்னுடன் இணைந்து அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார் இவர் போட்ட ஒரு பதிவு தான் தற்போது ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது. அதாவது எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் நீங்கள் எந்த அளவிற்கு உழைத்தீர்கள் என்றதையும் நான் பார்த்தேன் அது மட்டுமல்லாமல் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் எதிர்பார்க்காமல் இந்தப் படத்தை உருவாக்கினீர்கள்.

மேலும் ஒரு சில பேட்டிகளில் உங்களை நான் கோபமானவர் என்று கூறியிருக்கிறேன் ஆனால் நீங்கள் சரியான விஷயத்திற்கு தான் கோபப்படுவீர்கள் என்று உணர்ந்திருக்கிறேன் எனக்கு இப்படி ஒரு அழகான படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறி இருக்கிறார் நடிகை அபர்ணா தாஸ்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவர்கள் இருவரும் காதலிப்பார்களோ? என்று கூறி வருகின்றனர் அது மட்டுமல்லாமல் கவிதை பற்றி இந்த அளவிற்கு புகழ்ந்து பேச என்ன காரணம் என்று கூறி வருகிறார்கள். மேலும் நடிகை அபர்ணாதாஸ் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

kavin
kavin

Leave a Comment