அஜித்தின் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறாரா.? இதோ அவரே வெளியிட்ட பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் அந்த பதிவு குறித்து உண்மையா என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளத்தை திறந்தாலே விக்னேஷ் சிவன் நயன்தாரா தான் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள் இயக்குனர் தயாரிப்பாளர் என மிகவும் பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய வலிமை திரைப்படத்திலிருந்து நாங்க வேற மாதிரி  மற்றும் அம்மா சென்டிமென்ட் ஆகிய பாடல்களை எழுதி செம ஹிட்டானது.

இந்தநிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஓய்வு எடுப்பதற்காகவெளிநாடு சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்கள் இந்த நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவிலுக்கு சென்று வந்துள்ளார்கள் அப்போது நயன்தாரா நெற்றியில் குங்குமம் இருந்ததை பார்த்து பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா.? திருமணம் ஆகி விட்டதா.? என கேள்வி எழுப்பி வந்தார்கள்.

அந்த புகைப்படமும் சமூக வலைத் தளத்தில் வெளியானது இந்த நிலையில் அஜித்தின் 62வது படமாக உருவாக இருக்கும் திரைப்படத்தை விக்னேஸ் சிவன் தான் இயக்க இருப்பதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நயன்தாரா தான் நடிக்க இருப்பதாகவும் நம்பக தகுந்த  வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு ஏன் குட்டி பைக்கை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டோவில் இனி தல போல வருமா என்றெல்லாம் சொல்ல முடியாது அதுதான் வந்துட்டோம்ல குட்டி தல என கேப்ஷனாக பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர்  விக்னேஷ் சிவன் என்பது உண்மைதானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

viknesh shivan
viknesh shivan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment