வளர்த்த கெட மார்ல பாய்யிது என்பது இதுதானா.! சினிமாவில் அறிமுகப்படுத்திய அண்ணனுடன் மோதும் தனுஷ்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனராக இருக்கும்போதே இவருடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அந்த நடிகரிடம் பெற்றுக் கொண்டுதான் விடுவார் அப்படி இருக்கையில் இவர் தற்போது நடிகராக மாறினால் சும்மாவா இருக்கும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாகாசுரன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவரது சகோதரர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு உருவான வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாக இருந்த நிலையில் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அந்த வகையில் வாத்தி திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறதாக தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் செல்வராகவன் நடித்துள்ள பாகாசுரன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனால் அண்ணனா இருந்தால் என்ன தம்பியாக இருந்தால் என்ன வாழ்க்கையில் அவரவருடைய வாழ்க்கையை அவர்தான் வாழவேண்டும் என்பது போல தன்னுடைய சினிமா வாழ்க்கையின் மூலம் தற்போது அண்ணன் தம்பி இருவரும் மோதிக்கொள்ள இருக்கிறார்கள் அந்த வகையில் செல்வராகவன் நடித்துள்ள பாகாசுரன் திரைப்படமும் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படமும் ஒரே நாளில் மோதலில் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இவர்கள் பக்கம் தான் திரும்பி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அண்ணன் தம்பி இருவரும் மோத உள்ள முதல் திரைப்படம் என்பதால் இந்த இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அண்ணன் ஜெயிப்பாரா தம்பி ஜெயிப்பாரா என்ற கேள்விகள் தற்போதைய இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version