தளபதி 67 இல் விஜய்யின் கதாபாத்திரம் இதுதானா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

0
thalapathy-67
thalapathy-67

நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வசூலில் லாபம் பார்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி மற்றும் தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பூஜை உடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தீபாவளியை முன்னிட்டு தளபதி 67 திரைப்படம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படம் வெளியான உடனே தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் வாரிசு படத்தை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிக்கையாளர் தளபதி 67 குறித்து அப்டேட் கூறுங்கள் என்று கேட்டதற்கு இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என தற்போது பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விக்ரம் படத்திற்கு எப்படி அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டார்களோ அதே போல தான் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவாக வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் அந்த வீடியோவில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்றும் தெரிவிப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இத்தனை நாட்களாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஜனவரி 26 ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள்.