“வெந்து தணிந்தது காடு” படத்தில் சிம்புவை அடித்து நொறுக்க போவது இந்த வில்லன் தானாம்.? யார் அது தெரியுமா.? புகைப்படம் உள்ளே.

0

தற்போதைய காலகட்டத்தில் சினிமா உலகில் இருக்கும் இயக்குனர்களும் நடிக்க தொடங்கி உள்ளனர் அந்த வகையில் காதல் படங்களை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற கவுதம் மேனனும் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி நடிக்க வந்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தனது பிரதான தொழிலான இயக்குனர் வேலையை செய்யவே அவர் பெரிதும் விரும்புவதால் அவ்வபோது டாப் நடிகர்களுக்கு சூப்பரான கதைகளை சொல்லி படத்தை எடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது சிம்புவுக்கு ஒரு சூப்பரான கதை சொல்லி  படத்தில் கமீட்டாகி பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்திற்கு தற்போது “வெந்து தணிந்தது காடு” என்று பெயர் வைத்து உள்ளனர் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது அந்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது.

அதில் சிம்பு கையில் கட்டு போட்டு உட்கார்ந்திருந்தார் அதைப் பார்க்கும் பொழுது நிச்சயம் அவர் இந்த படத்தில் ரவுடிகளிடம்  அதிகமாக சண்டை போட்டு இருப்பார் என ரசிகர்கள் கூறிவந்தனர். மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிம்புவும் தனது உடல் எடையை பாதியாக குறைத்து படித்து வருகிறார். படத்தின் மூன்றாம் கட்டம் ஷூட்டிங் மிக விரைவிலேயே மும்பையில் நடக்க இருப்பதாக தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மலையாள நடிகர் “சித்திக்” என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பேசிய நடிகர் சித்திக் த்ரிஷ்யம், ஓடியன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sithik
sithik