ரஜினி நடிப்பில் மிரட்டிய “சிவாஜி” படத்தின் மொத்த வசூல் இவ்வளவா.? தலைவரு வேற ரகம்.

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தொடர்ந்து பல்வேறு சிறப்பான இயக்குனருடன் கதை கேட்டு நடித்துவருகிறார் அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான  அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

ரஜினி படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றியமைத்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக சிறந்த இயக்குனருடன் ரஜினி கைகோர்த்து நடித்தால் அந்த படம் எப்பொழுதுமே பிளாக்பஸ்டர் படமாக அமையும். அந்த வகையில் நடிகர் ரஜினி இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படங்கள் தான்.

அந்த வகையில் முதலாவதாக ரஜினியும், ஷங்கரும் இணையும் திரைப்படம் தான்  சிவாஜி. இந்த திரைப்படம் 2007ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து  ஸ்ரேயா, விவேக், சுமன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி திரைப்படம் செண்டிமெண்ட், காதல், காமெடி, சமூக கருத்து என அனைத்தையும் இடம் பெற்ற படமாக சிவாஜி படம் இருந்தது இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தது இந்த திரைப்படத்தின் உண்மையான வசூல் சுமார் 152 கோடி.

தமிழ் சினிமாவில் முதல் 100 கோடியை தொட்ட திரைப்படமாக சிவாஜி திரைப்படம் அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 84 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆனால் அதைவிட அதிக மடங்கு பணத்தை வசூலித்து என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment