விஜயின் அடுத்த பட “தலைப்பு” இதுவா.? ஒருவழியாக கண்டுபிடித்த ரசிகர்கள்..

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் குறிப்பாக விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைய உள்ளார் தற்பொழுது அதற்கான வேலைகள் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது அதே சமயம் இந்த படத்தில் ஐந்து வில்லன்கள் நடிக்கிறார்களாம்.

அதில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ்மேனன் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிம்புவும்.. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் தளபதி 67 படத்தில் சமந்தா, திரிஷா போன்றவர்களும் நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் உருவாகி வருகின்றன.

இதனால் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படத்திற்கு எந்த மாதிரியான தலைப்பு இருக்கும் என ரசிகர்கள் மண்டையை  உருட்டி வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது தளபதி 67 படத்திற்கு “ராய்ஸ்” என்று பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் இயக்கம் படங்களில் எடிடராக பணியாற்றும்  பிலோமின் ராஜின் அடுத்த படத்தின் பெயர் “ராய்ஸ்” என்று அவரது விக்கிபீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து தான் தளபதி 67 படத்தின் பெயர் “ராய்ஸ்” என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment