பாலிவுட்டில் நடிக்கும் காஜல் அகர்வால் இது தான் படத்தலைப்பா.? வெளிவந்த புதிய தகவல்.

தமிழ் சினிமா உலகில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து வந்த நடிகை தான் காஜல் அகர்வால் இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் தான் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்.

அதைத்தொடர்ந்து இவர் தமிழில் நான் மகான் அல்ல,துப்பாக்கி,மாரி,மாற்றான் விவேகம் போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் தமிழில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார் அதிலும் குறிப்பாக தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே தற்போது வரை புகழ்பெற்று விளங்கி வருகிறது.

இவர் விவேகம் திரைப்படத்தில் நடித்தபோது ரசிகர்களால் இவர் பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார் திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நிலையில் தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் சமூக வளைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் அவர் பாரிஸ் பாரிஸ், கோஷ்டி, கமலுடன் இந்தியன்2 தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார் அது மட்டுமல்லாமல் தற்போதும் இவர் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது ஆம் இந்தி படம் ஒன்றில் இவர் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதாகவும் அந்தத் திரைப்படத்திற்கு உமா என்ற படத்தலைப்பை வைத்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது.

kajal2
kajal2

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகும் நீங்கள் சினிமாவில் எதற்காக நடித்து வரிங்க எங்களுக்கு தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்கள் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment