சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்…

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் ஒன்று வெளியாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் வீரம், விசுவாசம், வேதாளம், போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூரியன் 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஆறு கெட்டப்பிற்கு மேல் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்ப முறையில் உருவாகி வருகிறது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படம் என்றால் அது சூரிய 42 திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் உருவாகி விட்டதாக கூறப்படுகிறது அதனை அடுத்தடுத்து வெளியிடப்படும் என தயாரிப்பாளர் கூறியிருந்தார் இந்த நிலையில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் லீக் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சூர்யா 42 திரைப்படத்திற்கு “அக்னீஸ்வரன்” என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் டைட்டில் வீடியோவாக வெளியாகும் என கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version